ஊரடங்கும் உத்தரவுக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் : காயல் அப்பாஸ் வேண்டு கோள் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது .
உலக முழுவதும் கொரணா என்கிற கொடிய வைரஸ் தாக்கியதுனால் ஆயிரம் கணக்காணோர் உயிரிழந்து உள்ளார்கள். மேலும் இந்தியாவிலும் கொரணா வைரஸ் வந்துள்ளது இந்த கொரணா வைரஸ்யினால் சிலர் உயிழந்துள்ளார்கள் பலருக்கு கொரணா வைரஸ் அறிக்குறியின் காரணமாக மருத்துவ மனையில் தனிமை படுத்த பட்டு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடதக்கது .
இந்த கொரணா வைரஸ் மக்கள் மீது பரவாமல் தடுக்கும் வகையில் மக்களை கொரணா வைரஸ்லிருந்து பாதுகாக்க மத்திய , மாநில அரசுகள் அணைத்து முன்னெச்சரிக்கை நடவக்கைகளையும் எடுத்து வருகிறது . இதணை பொது மக்கள் உணர்ந்து ஏப்ரல் 14 தேதி வரையிலும் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருப்பதே நல்லது . தேவை இல்லாமல் வெளியில் செல்வதை பெரும் பாலும் மக்கள் தவிர்க்க வேண்டும்.
மக்கள் நலன் கருதி தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வரும் மத்தியஅரசு, மாநில அரசுகளுக்கு மதிப்பளித்து இந்த ஊரடங்கும் உத்தரவுக்கு பொது மக்கள் அணைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டு மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் பொது மக்களுக்கு வேண்டு கோள் வைக்கின்றோம் .
கொரணா வைரஸ்லிருந்து மக்களை காப்பற்ற தனது உயிரை பணயம் வைத்து பணியாற்றி வரும் மருத்துவர்கள் , காவல் துறையினர்கள், துப்பபரவு தொழிலாளர்கள் , அரசு அதிகாரிகள் , மற்றும் செய்திகளை சேகரித்து உடனுக்குடன் மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும் செய்தியாளர்களுக்கும். ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறோம் .
எனவே : தமிழக அரசு அறிவித்த ரேசன் பொருட்கள் மற்றும் நிவாரண உதவி தொகை ஆயிரம் ரூபாயை உடனடியாக வழங்க வேண்டும் . தமிழகம் முழுவதும் வாடகை விட்டில் வசித்து வரும் நடுத்தர மக்கள் மற்றும் ஏழை மக்கள் வீட்டின் வாடகை கொடுக்க முடியாத சூழல் உள்ளது. ஆகவே வாடகை வீட்டின் உரிமையாளர்கள் மூனு மாதம் வீட்டின் வாடகையை தள்ளி வைக்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம் என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
" alt="" aria-hidden="true" />