குடியாத்தம்– 144 தடை உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியில் வந்த மக்களை காவல்துறையினர் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்.
வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார்அவர்களின் உத்தரவுபடி 144 தடை உத்தரவை மீறி குடியாத்தம் புதிய மற்றும் பழைய பேருந்து பகுதியில் தேவையில்லாமல் வெளியில் சுற்றித்திரிந்த வந்த மக்களை குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் சரவணன் மற்றும் குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் பொதுமக்களை பிடித்து அரசின் உத்தரவுகளை மீறியாவர்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்கவைத்து அறிவுரை வழங்கி அனுப்பினர்.